கேரளாவில் புதிதாக 1494 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் புதிதாக 1494 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கு அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1494 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும், கொரோனா உறுதிபடுத்தப்படும் விகிதம் தொடர்ந்து மூன்றாவது நாளாக 10 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மற்றொரு அலையை தடுக்க, சோதனைகளை துரிதப்படுத்தவும், விழிப்புணர்வை அதிகரிக்கவும் சுகாதார நிபுணர்கள் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் 439 புதிய தொற்றுடன் எர்ணாகுளம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. தற்போது 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story