தங்கக்கடத்தல் வழக்கில் எங்கள் அரசு மீது குற்றச்சாட்டுகள் வருவது இது முதல் முறை அல்ல - கேரள மந்திரி

தங்கக்கடத்தல் வழக்கில் எங்கள் அரசு மீது குற்றச்சாட்டுகள் வருவது இது முதல் முறை அல்ல - கேரள மந்திரி
x

கேரளா தங்கக்கடத்தல் வழக்கில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக, ஜாமினில் வெளியில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளா தங்கக்கடத்தல் வழக்கில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக, ஜாமினில் வெளியில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு அமீரகத்தில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில், முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரி ஸ்வப்னா கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமினில் உள்ள அவர், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், ரகசிய வாக்குமூலம் அளிப்பதாகவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து, எர்ணாகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில், ரகசிய வாக்குமூலம் அளித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "அனைத்தையும் கூற முடியாது என்றும், 2016ல் துபாய் சென்ற முதல்வர் பினராயி விஜயன், பையை விட்டுச் சென்றதாகவும், அதை துபாயில் டெலிவரி செய்ததாகவும் கூறினார். அந்தப் பையில் கரன்சி இருந்தது.

மேலும், துணைத் தூதரகத்திலிருந்து பிரியாணி பாத்திரங்கள், முதலமைச்சரின் வீட்டுக்கு அனுப்பப்பட்டன. அதில் பெரிய எடையுள்ள உலோக பொருட்கள் இருந்தன. அப்படி பல முறை முதல்வர் வீட்டுக்கு பிரியாணி அனுப்பப்பட்டது" என்று ஸ்வப்னா கூறியுள்ளார்.

ஸ்வப்னா சுரேஷின் இந்த வாக்குமூலம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகி உள்ளது. இந்த நிலையில்,கேரள சுற்றுலாத்துறை மந்திரி பிஏ முகமது ரியா இதற்கு பதில் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "2016-ல் ஆட்சி அமைத்த பிறகு, குற்றச்சாட்டுகள் வருவது இது முதல் முறையல்ல. இதற்கு முதல்வர் மற்றும் கட்சித் தலைவர்கள் பதிலளித்துள்ளனர், எங்கள் நிலைப்பாடும் அதேதான்" என்றார்.

Next Story