கேரளாவில் ஓடும் லாரியில் இருந்து இரும்பு ஷீட்கள் விழுந்து இருவர் உயிரிழப்பு


கேரளாவில் ஓடும் லாரியில் இருந்து இரும்பு ஷீட்கள் விழுந்து இருவர் உயிரிழப்பு
x

கேரளாவில் ஓடும் லாரியில் இருந்து இரும்பு ஷீட்கள் விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.

திருச்சூர்,

கேரள மாநிலம் திருச்சூர் புன்னயூர்குளம் கிராமத்தில் ஓடும் லாரியில் இருந்து இரும்புத் தகடுகள் (Iron Sheets) விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் முகமது அலி (வயது 75) மற்றும் ஷாஜி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோதும், இன்னொருவர் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோதும் இந்த சம்பவம் நடந்ததாக வடக்கேக்காடு போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story