பஞ்சாப் முதல்-மந்திரிக்கு காலிஸ்தான் பயங்கரவாதி கொலை மிரட்டல்


பஞ்சாப் முதல்-மந்திரிக்கு காலிஸ்தான் பயங்கரவாதி கொலை மிரட்டல்
x

குடியரசு தின விழாவின்போது தாக்குதல் நடத்தப்போவதாக குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார்.

சண்டிகர்,

வெளிநாடுகளில் இருந்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் வீடியோக்கள் வெளியிட்டு இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் பயங்கரவாதியும், தடை செய்யப்பட்ட எஸ்.எப்.ஜே. அமைப்பின் தலைவருமான குர்பத்வந்த் சிங் பன்னுன், தற்போது பஞ்சாப் முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதன்படி குடியரசு தின விழா தாக்குதலுக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் தயாராக வேண்டும் என்றும், அன்றைய தினம் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் மற்றும் பஞ்சாப் டி.ஜி.பி.யை கொல்லப்போவதாகவும், குர்பத்வந்த் சிங் மிரட்டல் விடுத்துள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் 19-ந்தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்பவர்களை கொல்லப்போவதாக குர்பத்வந்த் சிங் மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


1 More update

Next Story