மல்லிகார்ஜூன கார்கேவால் காங்கிரசில் மாற்றத்தை கொண்டுவர முடியாது... பழைய நிலையே நீடிக்கும் ; சசி தரூர்


மல்லிகார்ஜூன கார்கேவால் காங்கிரசில் மாற்றத்தை கொண்டுவர முடியாது... பழைய நிலையே நீடிக்கும் ; சசி தரூர்
x

மல்லிகார்ஜூன கார்கே போன்றோரால் காங்கிரசில் ஏற்கனவே உள்ள நடைமுறையே நீடிக்கும் என சசிதரூம் தெரிவித்துள்ளார்.

மும்பை,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேரள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்தோடு சசி தரூர் மற்றும் கார்கே தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மராட்டிய மாநிலம் நாக்பூரில் காங்கிரஸ் உறுப்பினர்களை சசி தரூர் சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், நாங்கள் (சசி தரூர்- மல்லிகார்ஜூன கார்கே) எதிரிகள் அல்ல, இது போரும் அல்ல. இது நமது கட்சியின் எதிர்காலத்திற்கான தேர்தல். காங்கிரஸ் கட்சியின் 3-வது முக்கிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே உள்ளார். கார்கே போன்றோர தலைவர்களால் காங்கிரசில் மாற்றங்களை கொண்டுவர முடியாது. மேலும், காங்கிரசில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடர்ந்து நீடிக்கும். காங்கிரஸ் தொண்டர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றார்போல் கட்சியில் மாற்றத்தை என்னால் கொண்டுவர முடியும்' என்றார்.


Next Story