உத்தர பிரதேசத்தில் கதவுலி தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
உத்தர பிரதேசத்தில் கதவுலி தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்து உள்ளது.
புதுடெல்லி,
உத்தர பிரதேசத்தில் காலியான கதவுலி தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்து உள்ளது. இதன்படி, டிசம்பர் 5-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை வருகிற டிசம்பர் 8-ந்தேதி நடைபெறும். குஜராத் மற்றும் இமாசல பிரதேச சட்டசபை தேர்தலின் முடிவுகளும் அன்றைய தினம் வெளியிடப்படுகிறது. அதனுடன் சேர்த்து உ.பி. இடைத்தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.
2013-ம் ஆண்டு முசாபர்நகர் வன்முறையில் தொடர்புடைய வழக்கில் குற்றவாளி என பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான விக்ரம் சிங் சைனி அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கதவுலி தொகுதி காலியான தொகுதியாக நேற்று முறைப்படி அறிவிக்கப்பட்டது.
அந்த வழக்கில் சைனி மற்றும் 11 பேர் குற்றவாளி என தீர்ப்பு கூறப்பட்டு அவர்கள் அனைவருக்கும் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.