கல்லூரிக்கு அழைத்து செல்வதாக கூறி காரில் கடத்தி மைனர் பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது


கல்லூரிக்கு அழைத்து செல்வதாக கூறி காரில் கடத்தி  மைனர் பெண் கற்பழிப்பு; வாலிபர் கைது
x

கல்லூரிக்கு அழைத்து செல்வதாக கூறி காரில் கடத்தி சென்று தங்கும் விடுதியில் வைத்து மைனர் பெண்ணை கற்பழித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் மைசூருவில் தலைமறைவாக இருந்தபோது போலீசாரிடம் சிக்கினார்.

மங்களூரு;

மைனர் பெண்

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா காரையா பகுதியில் ஒரு மைனர் பெண், பெற்றோருடன் வசித்து வருகிறாள். இவள், ஒரு பி.யூ. கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாள். இந்த நிலையில் கடந்த மே மாதம் 30-ந்தேதி மாணவி, கல்லூரிக்கு செல்ல பஸ்சில் ஏற சென்றுள்ளார்.

அப்போது அதேப்பகுதியை சேர்ந்த முனாசிர்(வயது 21) என்ற வாலிபர் காரில் சென்றுள்ளார். பின்னர் அவர், மாணவியை பார்த்ததும் கல்லூரிக்கு காரில் அழைத்து சென்றுவிடுவதாக கூறியுள்ளார். இதை நம்பி மாணவியும், அவருடன் காரில் ஏறி சென்றுள்ளார்.

ஆனால் முனாசிர், மாணவியை கல்லூரிக்கு அழைத்து செல்லாமல் காரை வேறுபாதையில் அதாவது உப்பினங்கடி நோக்கி ஓட்டி சென்றுள்ளார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவி, முனாசிரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.

கற்பழிப்பு

இதையடுத்து முனாசிர், மாணவியை உப்பினங்கடியில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று வலுகட்டாயமாக கற்பழித்துள்ளார். இதைதொடர்ந்து நடந்த விஷயத்தை வெளியே கூறினால் கொன்றுவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்துவிட்டு பஸ்நிலையத்திலேயே விட்டுசென்றுள்ளார்.

இதனால் பயந்துபோன மாணவி நடந்த விஷயத்தை வெளியே யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இதனை பயன்படுத்திகொண்ட முனாசிர், மாணவியை கல்லூரிக்கு அழைத்துசெல்வதுபோல் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று தொடர்ந்து கற்பழித்துள்ளார்.

இதனால் ஒரு கட்டத்தில் மனமுடைந்த பெண், பெற்றோரிடம் நடந்த விஷயத்தை கதறி அழுதபடி கூறினாள். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உப்பினங்கடி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனாசிரை வலைவீசி தேடிவந்தனர்.


கைது

இந்தநிலையில் முனாசிர், மைசூருவில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனாசிரை கைது செய்து உப்பினங்கடி அழைத்து வந்தனர். மேலும் கைதான அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story