வாலிபரை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய காதல் மனைவி


வாலிபரை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய  காதல் மனைவி
x

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய காதல் மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாதகிரி:

யாதகிரி மாவட்டம் சகாப்புராவை சேர்ந்தவர் சித்து (வயது 30). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கலபுரகியை சேர்ந்த கமலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சித்துவுக்கும், சுரேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். இதனால் சித்து வீட்டிற்கு சுரேஷ் அடிக்கடி சென்று வந்தார். அப்போது சுரேஷ், கமலா இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் 2 பேரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளனர். கள்ளக்காதல் பற்றி அறிந்ததும் சித்து, கமலாவை கண்டித்து உள்ளார்.

சித்து உயிருடன் இருந்தால் கள்ளக்காதலை தொடர முடியாது என்று கருதிய கமலாவும், சுரேசும் சேர்ந்து அவரை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்துவை கமலாவும், சுரேசும் சேர்ந்து கத்தியால் குத்திக்கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை சாக்கு மூட்டையில் வைத்து கட்டி சென்று வனப்பகுதியில் வீசி உள்ளனர். இதற்கு மஞ்சுநாத் என்பவரும் உடந்தையாக இருந்து உள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து சகாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலா, சுரேஷ், மஞ்சுநாத்தை கைது செய்து உள்ளனர்.


Next Story