கொல்கத்தாவில் அதிர்ச்சி...! தாயை இரண்டு முறை பலாத்காரம் செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை..!


கொல்கத்தாவில் அதிர்ச்சி...! தாயை இரண்டு முறை பலாத்காரம் செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை..!
x

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தாயை இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கற்பழித்த மகனுக்கு கொல்கத்தா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உள்ளது.

கொல்கத்தா,

உலகில் இதைவிட மோசமான செயல் இதுவரை கேள்விப்பட்டிருக்க முடியாது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தாயை இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கற்பழித்த மகனுக்கு கொல்கத்தா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹரிதேவ்பூர் காவல் நிலையத்தில் மே 5, 2019-ல், 65 வயது பெண் ஒருவர் தனது சொந்த மகனுக்கு எதிராக பலாத்கார புகார் அளித்தார். போதைக்கு அடிமையான இளையமகன் 7 முறை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர். இருந்தும் அவர் போதையில் இருந்து விடுபடவில்லை.

தாயார் அளித்த புகாரில் கூறப்பட்டு இருந்ததாவது:-

மூத்த மகனின் திருமணத்திற்குப் பிறகு, எனது 33 வயது இளைய மகனுடன் எனது வீட்டில் வசித்து வந்தேன். ஏப்ரல் 14 ஆம் தேதி எனது இளைய மகன் என்னைத் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தார். இருப்பினும், சமூக இழிவு பற்றிய பயம் என்னைப் பற்றிக் கொண்டது. இதுகுறித்து நான் யாரிடமும் தெரிவிக்கவில்லை.

இருப்பினும், என் மவுனம் என்னை மேலும் சித்திரவதை செய்ய ஊக்குவிப்பதாகத் தோன்றியது. அதே ஆண்டு மே 5 ஆம் தேதி, எனது இளைய மகன் மீண்டும் மிகவும் வன்முறையாக நடந்து கொண்டு என்னை பாலியல் வன்முறை செய்தார். இதை தொடர்ந்து போலீசில் புகார் அளித்துள்ளேன் என கூறி இருந்தார்.

இதையடுத்து அவரது மகனை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றம் தண்டனையை அறிவிக்கும் முன் குற்றவாளி ஏழரை மாதங்கள் சிறையில் இருந்தார். பாதிக்கப்பட்ட தாயின் மருத்துவ மதிப்பீடு, அவரது சாட்சியம் மற்றும் ஏழு கூடுதல் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்தது.

தாயின் மூத்த மகனும் சாட்சியமளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அவரது வீட்டிற்கு கீழே வாடகைக்கு இருக்கும் இரண்டு நபர்களும் சாட்சியம் அளித்தனர்.

1 More update

Next Story