கேரளா: ஓணம் விழாவில் நடனமாடி அசத்திய கலெக்டர் - சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்


கேரளா: ஓணம் விழாவில் நடனமாடி அசத்திய கலெக்டர் - சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
x

கேரளாவில் ஓணம் விழாவில் கலெக்டர் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 20-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் ஓணம் விழா களை கட்டியுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், சமூக நல அமைப்புகள், குடியிருப்போர் சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஓணம் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி கொல்லத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அப்சனா பர்வீன் தலைமையில் ஓணம் கலை விழா நடந்தது. இதையொட்டி ஊழியர்கள் அத்தப்பூ கோலம் போட்டு ஆடல், பாடல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கலெக்டர் அப்சனா பர்வீன் திடீரென எழுந்து ஒரு பாடலுக்கு நடனமாடினார். அவர் கேரள பாரம்பரிய உடையுடன் கருப்பு கண்ணாடி அணிந்து பாடலுக்கு ஏற்ற அபிநயத்துடன் நடனம் ஆடினார். கலெக்டரின் இந்த அசத்தல் ஆட்டம் அங்கிருந்த ஊழியர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story