நாகாலாந்து மாநில ஆளுநராக இல.கணேசன் பதவி ஏற்றார்


நாகாலாந்து மாநில ஆளுநராக இல.கணேசன் பதவி ஏற்றார்
x

நாகாலாந்து மாநில ஆளுநராக இல.கணேசன் பதவி ஏற்றுக்கொண்டார்.

கோஹிமா,

"நாகலாந்து மாநில ஆளுநராக இல.கணேசன் இன்று பதவியேற்றுக்கொண்டார். பல்வேறு மாநிலங்களுக்குப் புதிய ஆளுநா்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தாா். அதன்படி, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக இருந்த நிலையில் நாகலாந்து ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.

இதையடுத்து இன்று இல.கணேசன் நாகலாந்து மாநில ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். நாகலாந்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


Next Story