காஷ்மீரில் மின்திட்ட கட்டுமான பணியில் நிலச்சரிவு; ஒருவர் உயிரிழப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் மின்திட்ட கட்டுமான பணியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பொக்லைன் இயந்திர ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கிஷ்த்வார் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் ரத்லே மின்திட்ட கட்டுமான பணி நடந்து வருகிறது. இதில், தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்து உள்ளனர்.
இந்த நிலையில், திடீரென அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில், பணியில் இருந்த பொக்லைன் இயந்திர ஓட்டுனர் ஒருவர் சிக்கி கொண்டார். இதில் அவரை மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இதனால், அவர் உயிரிழந்து உள்ளார். அவரை மீட்பதற்காக சென்ற மீட்பு குழுவும், இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டது என கிஷ்த்வார் மாவட்ட துணை காவல் ஆணையாளர் தேவன்ஷ் கூறியுள்ளார். எனினும், தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
Related Tags :
Next Story