சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு மிரட்டல் கடிதம்: வக்கீல் கைது


சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு மிரட்டல் கடிதம்: வக்கீல் கைது
x

சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு மிரட்டல் கடிதம் எழுதிய வக்கீல் கைது செய்யப்பட்டார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அனுப்ரதா மொண்டல், கால்நடை கடத்தல் வழக்கில் கடந்த 11-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார். அவர் மீதான வழக்கை அசன்சோலில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ராஜேஷ் சக்கரவர்த்தி விசாரித்து வருகிறார்.

இதற்கிடையே, நீதிபதி சக்கரவா்த்திக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில், அனுப்ரதா மொண்டலுக்கு ஜாமீன் அளிக்காவிட்டால், கடு்ம் பின்விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அதை எழுதியவர் பெயர் அசன்சோல் மாவட்ட கோர்ட்டு தலைமை கிளார்க்கும், திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகருமான பப்படித்யா சட்டோபாத்யா என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

சட்டோபாத்யாவிடம் விசாரணை நடத்தியபோது, அசன்சோலை சேர்ந்த சுதிப்தா ராய் என்ற வக்கீலுடன் தனக்கு முன்விரோதம் இருப்பதாகவும், அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

சட்டோபாத்யா மீதான தனிப்பட்ட விரோதத்தால், அவரை சிக்க வைப்பதற்காக அவர் பெயரில் சுதிப்தா ராய் இந்த மிரட்டல் கடிதத்தை எழுதி இருப்பது தெரிய வந்தது.

மொபைல் கோபுர சிக்னலை பயன்படுத்தி, அசன்சோலில் சுதிப்தாவின் இருப்பிடத்தை கண்டறிந்த போலீசார், அவரை கைது செய்தனர்.


Next Story