ஜனாதிபதி வேட்பாளர் - மம்தா பானர்ஜி கூட்டத்தில் இடதுசாரிகள் பங்கேற்கும் என தகவல்


ஜனாதிபதி வேட்பாளர் - மம்தா பானர்ஜி கூட்டத்தில் இடதுசாரிகள் பங்கேற்கும் என தகவல்
x

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டத்தில் இடதுசாரிகள் பங்கேற்ப இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி,

திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளை சேர்ந்த 22 தலைவர்களுக்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஜூன் 15 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் தங்கள் கட்சியின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- "நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் இடதுசாரிகள் பங்கேற்கும். எதிரணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் அனைத்தும், ஒற்றுமையாக ஓரணியில் தொடர்ந்து பயணிக்க வேண்டுமென்பதே எங்களின் விருப்பம்.

சரத்பவார் பற்றி என்னிடம் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் சரத்பவாரை முன்மொழிந்தால் அது குறித்து அக்கட்சி விளக்கம் தர வேண்டும்" என தெரிவித்தார்.


Next Story