பத்ராவதியில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை
பத்ராவதியில் குடியிருப்புக்குள் சிறுத்தை புகுந்தது. இதனால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
பெங்களூரு:
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் விசுவேஸ்வரய்யா காகித ஆலை அமைந்துள்ளது. அதன் அருகே காகித ஆலையின் குடியிருப்பு அமைந்திருக்கிறது. நேற்று காலையில் தாவரேகொப்பா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை, இந்த குடியிருப்புக்குள் புகுந்தது. அப்போது சிறுத்தையைப் பார்த்து மக்கள் அலறியடித்து ஓடி தங்களது வீடுகளுக்குள் முடங்கினர். மேலும் இதுபற்றி தாவரேகொப்பா வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி அந்த சிறுத்தையை பிடித்தனர். பின்னர் அந்த சிறுத்தையை கூண்டில் அடைத்து தாவரேகொப்பாவுக்கு வனப்பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் விடுவித்தனர். சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
Related Tags :
Next Story