'சவால்களை புதிய இந்தியாவுக்கான வாய்ப்புகளாக மாற்றுவோம்' - பிரதமர் மோடி அழைப்பு


சவால்களை புதிய இந்தியாவுக்கான வாய்ப்புகளாக மாற்றுவோம் - பிரதமர் மோடி அழைப்பு
x

கோப்புப்படம்

சவால்களை புதிய இந்தியாவுக்கான வாய்ப்புகளாக மாற்றுவோம் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் முதலாவது தேசிய பயிற்சி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பிரகதி மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் உள்ள பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனங்களில் இருந்து 1,500-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திறன் கட்டமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பிரதமர் மோடி உரையாற்றினார்.

இது தொடர்பாக பின்னர் அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'தேசிய பயிற்சி மாநாட்டில் இன்று (நேற்று) கலந்து கொண்டேன். சிறப்பாக கற்றுக்கொள்வதற்கும் சேவை செய்வதற்கும் நமது முயற்சிகளின் ஒரு பகுதிதான் இது. திறன் மேம்பாட்டின் முக்கியத்துவம், தடைகளை முறியடிப்பது மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துதல் போன்றவை இதில் முன்னிறுத்தப்பட்டது' என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அவர், 'சவால்களை புதிய இந்தியாவுக்கான வாய்ப்புகளாக மாற்றிக்கொண்டே இருப்போம்' என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'சிவில் சர்வீஸ் துறையின் திறனை மேம்படுத்துவதன் மூலம் நாட்டில் நிர்வாக செயல்முறை மற்றும் கொள்கை அமலாக்கத்தை மேம்படுத்துவதற்கு பிரதமர் மோடி முன்னுரிமை அளித்து வருகிறார்' என்று கூறப்பட்டு இருந்தது.


Next Story