பூமி நேரத்தைக் கடைபிடிக்கும் வகையில் இந்தியாவின் முக்கிய தளங்களில் விளக்குகள் அணைப்பு
இந்தியாவின் முக்கிய தளங்களில் பூமி நேரத்தைக் கடைபிடிக்கும் வகையில் விளக்குகள் அணைக்கப்பட்டது.
புதுடெல்லி,
காலநிலை மாற்றங்கள் மற்றும் ஆற்றல் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக தனிநபர்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள அனைத்து விளக்குகளையும் ஒரு மணி நேரம் அணைக்க 'பூமி நேரம்' என்ற நிகழ்வு ஊக்குவிக்கிறது.
இந்த 'பூமி நேரம்' நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இன்று மார்ச் 25-ந்தேதி(நேற்று) 'பூமி நேரம்' கடைபிடிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு இந்தியாவின் முக்கிய தளங்களில் பூமி நேரத்தைக் கடைபிடிக்கும் வகையில் விளக்குகள் அணைக்கப்பட்டது. அதன்படி, தலைநகர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன், அக்ஷர்தம் கோவில், மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பாலம் உள்ளிட்ட இடங்களில் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு விளக்குகள் அணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.