விவசாயிகளின் கண் போன்றவர், பிரதமர் மோடி; நளின்குமார் கட்டீல் எம்.பி. பேச்சு
விவசாயிகளின் கண் போன்றவர், பிரதமர் மோடி என்று நளின்குமார் கட்டீல் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மங்களூரு;
விவசாயிகளின் கண் போன்றவர்...
தட்சிண கன்னடா மாவட்டம் அலங்காரில் தீன்தயாள் பவனில் பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாயி மகாலிங்க நாயக்காவுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் பா.ஜனதா மாநில தலைவரும், எம்.பி.யுமான நளின்குமார் கட்டீல் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-
கிசான் சம்மன் யோஜனா, பசல் பீமா யோஜனா ஆகிய திட்டங்கள் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான 8 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது. ஏழைகள், விவசாயிகளுக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். விவசாயிகளின் உயிர் நாடி மற்றும் கண் போன்றவர், பிரதமர் மோடி.
காங்கிரஸ் அழிந்து வருகிறது
நாட்டில் காங்கிரஸ் கட்சி அழிந்து வருகிறது. பா.ஜனதா அரசின் நலத்திட்டங்களை அரசியல் காரணங்களுக்காக காங்கிரஸ் எதிர்த்து வருகிறது. இதன்மூலம் காங்கிரஸ் தன் மரியாதையை இழந்துவிட்டது.
நமது செயல்பாடுகளை மக்கள் கவனித்துகொண்டிருக்கிறார்கள் என்ற குறைந்தபட்ச அறிவுகூட அவர்களுக்கு இல்லை. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை மந்திரி எஸ்.அங்கார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.