புதிய மதுபான கொள்கை வழக்கு: ஜாமீன் கோரி மணிஷ் சிசோடியா மனு தாக்கல்
புதிய மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி,
புதிய மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணிஷ் சிசோடியா டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சிசோடியாவின் 5 நாள் சிபிஐ காவல் முடிவடையும் சனிக்கிழமை (மார்ச் 4) அன்று ஜாமீன் விசாரணை நடைபெறலாம்.
இந்த விவகாரத்தில் தலையிடவோ முடியாது என்று கூறி சிசோடியாவின் ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்ததை அடுத்து, தற்போது மணிஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டார். கைதை தொடர்ந்து, டெல்லி துணை முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் மணீஷ் சிசோடியா. இவரது ராஜினாமா மனுவை டெல்லி முதல்-மந்திரி அர்விந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார்.