மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி- மக்களவை ஒத்திவைப்பு


மணிப்பூர் விவகாரம்:  எதிர்க்கட்சிகள் கடும் அமளி- மக்களவை ஒத்திவைப்பு
x

மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் இன்றும் பாதிக்கப்பட்டு வருகின்றன

புதுடெல்லி,

மணிப்பூர் கலவரம் தொடர்பாக, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத்தையும் அவர்கள் முடக்கி வருகின்றனர். இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடியதில் இருந்தே அவை தொடர்ந்து முடங்கி வருகிறது.

அந்த வகையில் இன்று அவை கூடியதும், மணிப்பூர் விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

1 More update

Next Story