இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ரூ.8,000 கோடி இழப்பு- முதல் மந்திரி சுக்விந்தர் சிங்


இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ரூ.8,000 கோடி இழப்பு- முதல் மந்திரி சுக்விந்தர் சிங்
x

இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ரூ.8,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

சிம்லா,

இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதோடு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இதுகுறித்து அம்மாநில முதல் மந்திரி சுக்விந்தர் சிங் கூறியதாவது:

இமாச்சலப்பிரதேசம் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான மழை மற்றும் வெள்ளப் பேரிடரை எதிர்கொண்டுள்ளது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 8,000 கோடி ரூபாயை எட்டும். இதற்காக மத்திய அரசு உடனடியாக நிதியுதவி வழங்கிட வேண்டும். மழையினால் பாதிப்பான சாலைகள், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தைச் சீரமைக்க முயற்சி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.


Next Story