"பெற்றோரின் அன்பை விட காதல் வலிமையானது" - கர்நாடக ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு


பெற்றோரின் அன்பை விட காதல் வலிமையானது - கர்நாடக ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு
x

பெற்றோர், குடும்ப உறுப்பினர்களிடம் கிடைக்கும் அன்பைக் காட்டிலும் காதல் வலிமையானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பெங்களூரு,

கர்நாடக ஐகோர்ட்டில் நாகராஜு என்பவர் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கல்லூரியில் தங்கி படித்து வந்த தனது மகள் நிசர்காவை காணவில்லை என்றும், ட்ரைவராக இருந்த நிகில் என்பவர் தனது மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து போலீசாரின் உதவியுடன் நிசர்கா மற்றும் நிகில், இருவரும் நீதிபதிகள் முன்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணையின் போது நிசர்கா, தான் மேஜர் என்றும் விருப்பப்பட்டு நிகிலை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது பெற்றோர், குடும்ப உறுப்பினர்களிடம் கிடைக்கும் அன்பைக் காட்டிலும் காதல் வலிமையானது என்று தெரிவித்த நீதிபதிகள், நிசர்கா தனது காதல் கணவர் நிகிலுடன் சேர்ந்து வாழ அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story