இளம்பெண்ணுடன் சேர்ந்து புகைப்படம் வெளியிட்ட வாலிபர்


இளம்பெண்ணுடன் சேர்ந்து புகைப்படம் வெளியிட்ட வாலிபர்
x
தினத்தந்தி 19 Nov 2022 6:45 PM GMT (Updated: 19 Nov 2022 6:45 PM GMT)

சிக்கமகளூருவில் இளம்பெண்ணுடன் சேர்ந்து புகைப்படம் வெளியிட்ட வாலிபர் மீது போலீ்ஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சிக்கமகளூரு:

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா ஹரிகரபுராவை சேர்ந்தவர் முகமது ரவூப். அதே பகுதியை சேர்ந்தவர் மனோஜ். மனோஜிற்கு ஒரு சகோதரி உள்ளார். இவருக்கும், முகமது ரவூப்பிற்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது முகமது ரவூப் அந்த பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். இதை அந்த பெண் ஏற்று கொண்டார். இதையடுத்து இருவரும் காதலித்தனர். இந்நிலையில் அந்த பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களை முகமது ரவூப் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் நான் திருமணம் செய்து கொள்ளும் பெண் இவர்தான் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதை பார்த்த மனோஜ், சிக்கமகளூரு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த மனோஜ் இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். அதில் முகமது ரவூப் என்பவர் எனது சகோதரியை மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறார். மேலும் 'லவ் ஜிகாத்' அடிப்படையில் திருமணம் செய்து கொள்ளபோவதாக கூறி, சமூக வலைத்தளங்களின் வாயிலாக எங்கள் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்திட முயற்சிக்கிறார் என்று கூறியிருந்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story