பெங்களூருவில் மிக குறைந்த வெப்பநிலை பதிவு; நகரவாசிகள் கடும் குளிரால் அவதி


பெங்களூருவில் மிக குறைந்த வெப்பநிலை பதிவு; நகரவாசிகள் கடும் குளிரால் அவதி
x
தினத்தந்தி 25 Oct 2022 6:45 PM GMT (Updated: 25 Oct 2022 6:45 PM GMT)

பெங்களூருவில் மிக குறைந்த வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனால் நகரவாசிகள் கடும் குளிரால் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

பெங்களூரு:

கடும் குளிர் நிலவுகிறது

கர்நாடகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூருவில் இடைவிடாது கொட்டி வந்த மழை, தற்போது ஓய்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக மழை பெய்யவில்லை. ஆனாலும் நகரில் கடந்த சில தினங்களாக காலையும், மாலையும் கடுமையான குளிர் நிலவி வருகிறது.

இதனால் பெங்களூரு நகரவாசிகள் கடும் குளிரால் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். நகரின் சில பகுதிகளில் காலை 10 மணி வரை பனி மூட்டம் இருப்பதை காண முடிகிறது.

76.28 டிகிரி

பெங்களூரு நகரில் நேற்று முன்தினம் குறைந்தபட்ச ெவப்பநிலை பதிவாகி உள்ளது. அதாவது, நகரில் நேற்று முன்தினம் 76.28 டிகிரி வெப்பநிலையே பதிவாகி இருந்தது. பெங்களூரு நகரில் மேலும் 3 நாட்கள் குறைந்த வெப்பநிலை இருக்கும் எனவும், கடுமையான குளிர் நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த 3 தினங்களும் 62.6 டிகிரி முதல் 84.2 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story