மத்தியபிரதேசம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு


மத்தியபிரதேசம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு
x

சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

புவனேசுவர்,

மத்தியபிரதேசம் மாநிலம் அலிராஜ்பூர் அருகே காண்டலா தெவ்ரி கிராமத்தில் விவசாயத்திற்காக 20 அடி ஆழத்தில் ஆழ்துளை ஒன்று தோண்டப்பட்டிருந்தது. இந்த ஆழ்துளை கிணற்றின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராத விதமாக அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தான். மகனை காணாமல் அவனுடைய பெற்றோர் தேடியபோது கிணற்றுக்குள் சிறுவன் தவறி விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் குழி தோண்டி சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டான். எனினும் சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story