கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய மத்திய பிரேதச முதல்-மந்திரி... வீடியோ வைரல்


கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய மத்திய பிரேதச முதல்-மந்திரி... வீடியோ வைரல்
x

ராஜஸ்தான் முதல்-மந்திரியை போன்று, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் மத்திய பிரேதச முதல்-மந்திரி தீபாவளி கொண்டாடி மகிழ்ந்து உள்ளார்.



போபால்,


கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாக களையிழந்த பண்டிகை கொண்டாட்டங்கள் தற்போது மெல்ல மீண்டும் மக்களால் பரவலாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை வழக்கம்போல் மக்கள் கொண்டாட தயாராகி உள்ளனர்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்து உள்ளார்.

இதேபோன்று இந்த பண்டிகை கொண்டாட்டத்தில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் தீபாவளியை இன்று கொண்டாடி மத்திய பிரேதச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மகிழ்ந்து உள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறும்போது, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவேன். அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வேன்.

போபால் மற்றும் அருகேயுள்ள பகுதிகளில் இருந்து அவர்கள் வரவுள்ளனர். தூரத்தில் உள்ள குழந்தைகளுக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு நாங்கள் அறிவுறுத்தல் வழங்கி உள்ளோம். குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்படும் என கூறினார்.

அனைத்து மகன்களுக்கும், மகள்களுக்கும் என்னுடைய தீபாவளி வாழ்த்துகள். கவலை வேண்டாம். உங்களுடன் மாமா இருக்கிறார் என கூறியுள்ளார். இதேபோன்று, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் போபாலில் தீபாவளியை நடனம் ஆடி சிவராஜ் சிங் சவுகான் கொண்டாடினார். அவர், நிகழ்ச்சியில் தனது மனைவியையும் உடன் அழைத்து நடனம் ஆட செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.




Next Story