உயிரை பணயம் வைத்து தண்ணீரை வீட்டிற்கு சுமந்து வரும் பெண்கள்...!
மத்திய பிரதேசத்தில் உயிரை பணயம் வைத்து வறண்ட கிணற்றில் இருந்து பெண்கள் தண்ணீர் எடுத்து வரும் சம்பவம் நடைபெற்று வருகிறது.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் குசியா கிராமத்தை சேர்ந்த பெண்கள் உயிரை பணயம் வைத்து வறண்ட கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். சில பெண்கள் ஆழமான கிணற்றில் உயிரை பணயம் வைத்து கயிரை பிடித்துக்கொண்டு தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
இது குறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:-
கிணற்றில் இறங்கி தண்ணீர் சேகரிக்க வேண்டும். இங்க இருந்த 3 கிணறுகளும் வறண்டு விட்டன. கை பம்புகளில் கூட தண்ணீர் இல்லை. அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து ஒட்டுக்கேட்டு செல்வார்கள். இந்த முறை முறையான தண்ணீர் கிடைக்கும் வரை நாங்கள் யாரும் ஓட்டுபோடுவதில்லை என முடிவு செய்துள்ளோம் என்றனர்.
Related Tags :
Next Story