மத்திய பிரதேசம்: மைனர் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.30,000 சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் ஷாடோல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தனது தோழியுடன் கோச்சிங் வகுப்பிற்குச் சென்றுவிட்டு நேற்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது.
இதையடுத்து அந்த 15 வயது சிறுமியை அவர்கள் 5 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த 5 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்துறையிடம் அளித்த புகாரின்பேரில் போலீசார் அடையாளம் தெரியாத 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.30,000 சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story