மக்னா யானை விவகாரம்; கலெக்டருக்கு அதிகாரம் இல்லை- கேரள ஐகோர்ட்டு அதிரடி


மக்னா யானை விவகாரம்; கலெக்டருக்கு அதிகாரம் இல்லை- கேரள ஐகோர்ட்டு அதிரடி
x

ஆட்கொல்லி யானையான, பேலூர் மக்னா யானையை வெடி வைத்து கொல்ல உத்தரவிட வயநாடு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அதிகாரம் இல்லை என்று கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

பேலூர் மக்னா யானையை பிடிப்பது குறித்த தகவல்களை அறிவிக்குமாறு வயநாடு மாவட்ட கலெக்டர் ரேணு ராஜுக்கு கேரளா ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி வயநாடு கலெக்டர் கோர்ட்டில் தகவல்களை அளித்தார். அதில், பேலூர் மக்னா யானை ஆட் கொல்லி யானையாக மாறிவிட்டதாலும் , மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிக்குள் நுழைந்து பல மனித உயிர்களை அது குடித்துள்ளதாலும் அதனை வெடி வைத்துக் கொல்ல வேண்டும் என்று தெரிவித்திருந்ததாக கூறியிருந்தார்.

இந்த கருத்தை கேரள ஐகோர்ட்டு ஏற்க மறுத்தது மேலும் இதனை வெடி வைத்து கொல்ல உத்தரவிடும் அதிகாரம் கலெக்டருக்கு இல்லை என்று தெரிவித்த கோர்ட்டு, கர்நாடகா மாநில வனத்துறையுடன் சேர்ந்து அதனை மயக்க ஊசி போட்டு பிடிக்க ஒரு மாஸ்டர் பிளான் தயாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

வயநாடு பகுதியில் மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் இந்த யானை இறங்கும் என்ற உறுதியானால் தக்க விதத்தில் அதனை மயக்க ஊசி போட்டு பிடிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. அதே நேரம் மயக்க ஊசி போட்டு இந்த யானையை பிடிப்பதற்கு கடந்த 10 நாட்களாக கேரள வனத்துறையினர் முயன்று வரும் நிலையில் கர்நாடகா மாநில வனத்துறையுடன் சேர்ந்து யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க ஒரு மாஸ்டர் பிளான் தயாரிக்க வேண்டும் என்று நீதிபதி கே. பாபு தலைமையிலான இருவர் அமர்வு தெரிவித்துள்ளது.


Next Story