மராட்டியத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி வலுவாக உள்ளது: காங்கிரஸ்
மராட்டியத்தில் மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி வலுவாக இருப்பதாக காங்கிரஸ் தொிவித்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாமில் முகாமிட்டுள்ளதால் மாநில அரசியலில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அக்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இது தொடா்பாக கருத்து தொிவித்த காங்கிரஸ் அமைச்சா் அசோக் சவான், மராட்டியத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை நன்றாக உள்ளது. சிவசேனா தொண்டா்கள் கிளா்ச்சி எம்.எல்.ஏக்களுக்கு எதிராக மட்டுமே தங்கள் கோபத்தினை வெளிப்படுத்துகின்றனா். மேலும், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்கள் அணிக்கு புதிய பெயரை பயன்படுத்த சட்டபூர்வ அனுமதியை பெற வேண்டும். என்றாா்.
மராட்டியத்தில் மகா விகாஸ் அகாதி கூட்டணி சட்டபூர்வமாக வலுவான நிலையில் உள்ளதாகவும், நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம். தற்போது அரசியலமைப்பு முட்டுக்கட்டைக்கான சட்டப் போராட்டம் நடந்து வருகிறது," என மராட்டிய வருவாய் மந்திாியும் காங்கிரஸ் தலைவருமான பாலாசாஹேப் தோரட் தொிவித்தாா்.
மராட்டிய துணை சபாநாயகா் நர்ஹரி ஜிர்வாலை, அரசியலமைப்பு சட்டம் பிாிவு 179-ன் கீழ் பதவி நீக்கம் செய்ய கோாி ஏக்நாத் ஷிண்டே அணியினா் நோட்டீஸ் அளித்துள்ளனா். ஆனால் விதிப்படி, சட்டசபை கூட்டத்தொடரை கூட்ட கவா்னா் அழைப்பு விடுத்த பிறகே எந்த தீா்மானமும் கொண்டு வர முடியும் என் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில் தொிவித்து உள்ளது.