மராட்டியத்தில் 4 கோவில்களில் ஆடை கட்டுப்பாடு


மராட்டியத்தில் 4 கோவில்களில் ஆடை கட்டுப்பாடு
x

கோப்புப்படம்

மராட்டிய மாநிலத்தில் 4 கோவில்களில் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நாக்பூர்,

மராட்டிய கோவில்கள் கூட்டமைப்பு சங்கம் நாக்பூர் நகரில் உள்ள 4 கோவில்களில் ஆடை கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்து சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சினில் கன்வாட் கூறியதாவது:-

மராட்டிய கோவில் கூட்டமைப்பு சங்கம் மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆடை கட்டுப்பாட்டை கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதில் முதற்கட்டமாக நாக்பூரை சேர்ந்த தாந்தோலியில் உள்ள கோபாலகிருஷ்ண கோவில், பெலோரியில் உள்ள சங்கத்மோச்சன் பஞ்சமுக அனுமன் கோவில், கனோலிபாராவில் உள்ள பிரகஸ்பதி கோவில் மற்றும் ஹில்டாப் பகுதியில் உள்ள துர்காமாதா கோவில் ஆகியவற்றில் இந்த ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த கோவில்களில் பக்தர்கள் ஆட்சேபனைக்குரிய மற்றும் அநாகரீகமான ஆடைகளை அணிந்துவர கூடாது. கோவில்களின் புனித தன்மையை பாதுகாப்பதே இந்த ஆடை கட்டுப்பாட்டின் முதன்மையான நோக்கம் என்று அவர் கூறினார்.

உஸ்மனாபாத் மாவட்டத்தில் உள்ள துல்ஜா பவானி கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஷார்ட்ஸ் மற்றும் பெர்முடாஸ் போன்ற அநாகரீகமான ஆடைகளை அணிந்துவர சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்திய சில மணி நேரங்களிலேயே உத்தரவு வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story