அணை நீரில் உயிரை பணயம் வைத்து மீன் பிடிக்கும் மக்கள்; நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
மகாராஷ்டிராவின் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை பெய்து வருகிறது.
சந்திரபூர்,
மகாராஷ்டிராவின் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை பெய்து வருகிறது. இதனால், நீர் தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன. அணைக்கட்டுகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அந்த வகையில் கோர்பனா தாலுகாவில் அமைந்துள்ள பக்காடிகுடம் அணை முழுக்கொள்ளவு எட்டியுள்ளது. இதனால், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தண்ணீர் திறந்து விடுபடுகிறது.
அணையில் இருந்து ஆர்ப்பரித்து செல்லும் நீரில்,மக்கள் ஆபத்தை உணராமல் மீன் பிடித்து வருகின்றனர். சிலர் கையில் வலைகளுடன் அணைக்குள் சென்று மீன் பிடிக்க முயற்சித்தையும் காண முடிந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட போது, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story