ரசாயனம் கொண்டு சென்ற லாரி கவிழ்ந்து விபத்து


ரசாயனம் கொண்டு சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
x

ரசாயனம் கொண்டு சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் விபத்து நடந்த பகுதி அருகே பொதுமக்கள் வர போலீசார் தடை விதித்தனர்.

மும்பை,

குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு ஹெக்ஸா மெத்திலீன் என்ற ரசாயனத்தை ஏற்றிக்கொண்டு லாரி சென்றுகொண்டிருந்தது. மராட்டிய மாநிலம் லதூர் மாவட்டம் அகமத்பூர் அருகே லாரி இன்று வந்தபோது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரி நடு சாலையில் கவிழ்ந்து ரசாயனமும் கொட்டியது. லாரி டிரைவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரியில் இருந்த ரசாயனம் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பதால் அப்பகுதியில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் நுழைய தடை விதித்தனர்.

பின்னர், லாரியில் இருந்து கவிழ்ந்த ரசாயனம் பத்திரமாக எடுக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


Next Story