மராட்டியம்: அரசு மருத்துவமனையில் 132 ஆண்டு பழமையான சுரங்க பாதை கண்டுபிடிப்பு


மராட்டியம்:  அரசு மருத்துவமனையில் 132 ஆண்டு பழமையான சுரங்க பாதை கண்டுபிடிப்பு
x

மராட்டியத்தில் அரசு மருத்துவமனையில் 132 ஆண்டு பழமையான சுரங்க பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.



மும்பை,


மராட்டியத்தின் மும்பை நகரில் பைகுல்லா பகுதியில் ஜே.ஜே. என்ற அரசால் நடத்தப்படும் மருத்துவமனை ஒன்று அமைந்து உள்ளது. இந்த மருத்துவமனையின் கீழ் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சுரங்க பாதை இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி மருத்துவ அதிகாரியான டாக்டர் அருண் ரத்தோட் கூறும்போது, நீர் கசிவு பற்றிய புகார் வந்ததும் நர்சிங் கல்லூரி கட்டிடத்தில் நாங்கள் ஆய்வு செய்தோம். பொதுப்பணி துறை பொறியியலாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் வந்து கட்டிடத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

இதில், 132 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட 200 மீட்டர் நீளமுள்ள இந்த சுரங்க பாதை பற்றிய விவரம் தெரிய வந்து உள்ளது என கூறியுள்ளார்.

இந்த சுரங்க பாதை, மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான சர் டி.எம். பெடிட் என்ற மருத்துவமனையின் கீழ் அமைந்துள்ளது. கடந்த 1892-ம் ஆண்டு மார்ச்சில் இந்த மருத்துவமனை திறக்கப்பட்டு உள்ளது.


Next Story