மராட்டியம்: குழந்தைகளுடன் பின்னோக்கி சென்ற பள்ளி வேன் திடீரென சறுக்கி கவிழ்ந்து விபத்து..!
மராட்டிய மாநிலத்தில் குழந்தைகளுடன் பின்னோக்கி சென்ற பள்ளி வேன் ஒன்று திடீரென சறுக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தானே,
மராட்டிய மாநிலம் தானே பகுதியில் இன்று காலை பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது சறுக்கலான பாதையில் டிரைவர் பின்னோக்கி செல்ல முற்பட்டார்.
அந்த நேரத்தில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நொடிப்பொழுதில் ஒரு பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைக்கண்ட அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக வேனில் இருந்து மாணவர்களை பத்திரமாக மீட்டனர். சில குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story