லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட நபர் கைது!

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட நபர் கைது!
x

புனேவை சேர்ந்த ஒருவரை மராட்டிய பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) இன்று கைது செய்தது.

புனே,

புனேவை சேர்ந்த ஒருவரை மராட்டிய பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) இன்று கைது செய்தது.

புனேவில் வசிக்கும் ஜுனைத் என அடையாளம் காணப்பட்ட அந்த சந்தேக நபர், லஷ்கர்-இ-தொய்பாவின் அமைப்பிற்கு பயங்கரவாதிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள் அவரை பின்தொடர்ந்தனர்.

அந்த சந்தேகப்படும் நபர், சமூக ஊடகங்கள் மூலம் லஷ்கர்-இ-தொய்பாவின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில், அவர் பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.

Next Story