மராட்டியத்தில் தொழிலதிபர் போன் ஹேக் செய்யப்பட்டு ரூ.1 கோடி பணம் பரிமாற்றம் - போலீசார் விசாரணை
மராட்டியத்தில் தொழிலதிபர் போன் ஹேக் செய்யப்பட்டு ஒரு கோடி பணம் பரிமாற்றப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தானே,
மராட்டிய மாநிலம் தானே நகரில் தொழிலதிபர் ஒருவரின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு ரூ. 99.50 லட்சம் பணம் பரிமாற்றப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 6-7 தேதியில் அவரது போன் ஹேக்கிங் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அவரது வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு நெட் பேங்கிங் மூலம் பணம் மாற்றப்பட்டதாக வாக்லே எஸ்டேட் காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story