சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சை கருத்து; மராட்டிய கவர்னரை திரும்ப பெற காங்கிரஸ் வலியுறுத்தல்


சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சை கருத்து;  மராட்டிய கவர்னரை திரும்ப பெற காங்கிரஸ் வலியுறுத்தல்
x

சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சைகுரிய வகையில் பேசிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

மும்பை,

மராட்டிய கவர்னர் பகத்சிங்கோஷ்யாரி நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, " சத்ரபதி சிவாஜி அந்த காலத்தின் அடையாளம். அம்பேத்கர், நிதின் கட்காரி ஆகியோர் இந்த காலத்தின் அடையாளம் " என கூறியிருந்தார். பகத்சிங்கோஷ்யாரியின் இந்த பேச்சுக்கு மராட்டியத்தில் கடும் கண்டனங்கள் எழுந்து உள்ளன. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கவர்னரின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளன. மேலும் கவர்னருக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்களும் நடந்தன.

இந்தநிலையில் பகத்சிங்கோஷ்யாரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- சித்தாந்த ரீதியில் தூய்மையான மராட்டியத்தை உருவாக்க காங்கிரஸ் பாடுபட உள்ளது. சமூக சீர்திருத்தவாதிகளான மகாத்மா புலே, சாவத்திரிபாய் புலே மற்றும் சத்ரபதி சிவாஜி போன்றவர்கள் அவமதிக்கப்படுவதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது. பகத்சிங்கோஷ்யாரி மகாத்மா புலே, சாவித்திரி பாய்புலேவுக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இதேபோல பா.ஜனதாவை சேர்ந்த சுதான்சு திரிவேதி, சத்ரபதிசிவாஜி முகலாய மன்னர் அவுரங்கசிப்பிடம் 5 முறை மன்னிப்பு கேட்டதாக கூறி சத்ரபதி சிவாஜியை அவமதித்து உள்ளார். இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்காக பா.ஜனதா பொது மன்னிப்பு கேட்க வேண்டும். கவர்னர் பகத்சிங்கோரியை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story