பெற்ற மகளை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது
சிறுமியின் அக்கா அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு பாதிக்கப்பட்ட சிறுமியுடன் சென்று பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் நவுகார்க் நகரில் 14 வயது சிறுமி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சில நாட்களூக்கு முன்பு அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அந்த சமயத்தை பயன்படுத்திய தந்தை சிறுமியை அழைத்து தவறாக நடத்து கொள்ள முயன்று இருக்கிறார். ஆனால் சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து சிறுமியை தந்தை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
இச்சம்பவம் பற்றி யாரிடம் சொல்ல கூடாது என்று சிறுமியை மிரட்டியுள்ளார். சிறுமியும் இச்சம்பவம் பற்றி யாரிடமும் தெரிவிக்காமல் மறைத்திருக்கிறார். இதனையடுத்து சிறுமியின் தந்தை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
இந்நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அக்காவிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதை தொடர்ந்து சிறுமியின் அக்கா அருகில் உள்ள நவுகார்க் போலீஸ் நிலையத்திற்கு சிறுமியுடன் சென்று சம்பவம் பற்றி புகார் அளித்துள்ளார். சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியின் தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.