கர்ப்பிணி பெண் கழுத்து நெரித்து கொலை - கணவன் கைது
மும்பையில் கர்ப்பிணி பெண்ணை அவரது கணவனே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் கர்ப்பிணி பெண்ணை அவரது கணவனே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் தாராவி பகுதியைச் சேர்ந்தவர் கன்ஹய்லால் சரோஜ். இவரது மனைவி ரோஷினி சரோஜ் (வயது 24) கர்ப்பமாக இருந்துள்ளார். கடந்த 11-ந்தேதி ரோஷினியை கன்ஹய்லால் குடும்பத்தினர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் ரோஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளனர்.
இந்த நிலையில், ரோஷினியின் தந்தை சுரேஷ் சரோஜ் அளித்த புகாரின் பேரில் ரோஷினியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது மாமியார் மற்றும் மாமனார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணையில் ரோஷினி வரதட்சணைக்காக மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.