மராட்டியத்தில் மழைக்கு 76 பேர் பலி


மராட்டியத்தில் மழைக்கு 76 பேர் பலி
x

மராட்டியத்தில் கடந்த ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து இதுவரை மழைக்கு 76 பேர் பலியாகி உள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த மாதம் பருவமழைக்காலம் தொடங்கியது. இதில் கடந்த ஒரு வாரமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கொங்கன் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 13-ந் தேதி வரை மழை பெய்யும் என எச்சரித்து உள்ளது.

இதையடுத்து மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். இதேபோல ராய்காட், ரத்னகிரி, சத்தாரா, கோலாப்பூர் ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களில் மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் மராட்டியத்தில் கடந்த மாதம் முதல் மழைக்கு 76 பேர் பலியானது தொியவந்து உள்ளது. இதில் கடந்த சனிக்கிழமை மட்டும் 9 பேர் பலியானார்கள். இதில் வார்தா மாவட்டத்தில் 4 பேர், கட்சிரோலியில் 3 பேர், நான்தெட், சிந்துதுர்க்கில் தலா ஒருவர் உயிரிழந்தார். இதேபோல 125 கால்நடைகள் உயிரிழந்து உள்ளன.


Next Story