பீகாரில் நடந்து வரும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் - மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்


பீகாரில் நடந்து வரும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் - மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்
x

பீகாரில் நடந்து வரும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் என மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார் மராட்டிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதேபோல மகாவிகாஸ் அகாடி கூட்டணி கட்சி எம்.எல்.சி.க்கள் சிலரும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என சட்டமேல்சபையில் வலியுறுத்தி பேசினர். இதை தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் அரசு தனது நிலைப்பாட்டை கூற வேண்டும் என மேல்சபை துணை தலைவர் நீலம் கோரே உத்தரவிட்டார்.

இந்தநிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் சட்டசபையில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

பீகார் முறை ஆய்வு செய்யப்படும்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. பீகார் மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து வருகிறது. பீகாரில் நடந்து வரும் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை ஆய்வுசெய்ய நாம் கமிட்டியை அனுப்ப உள்ளோம். அந்த கமிட்டி பீகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை ஆய்வுசெய்யும். இந்த விவகாரத்தை கவனமாக ஆய்வுசெய்ய வேண்டியது கட்டாயம். பீகாரில் நடந்து வரும் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை ஆய்வுசெய்த பிறகு அது தொடர்பான தகவல்கள் நமக்கு தெரியவரும். பீகாரில் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு முறை நமது மாநிலத்துக்கும் சரியாக இருக்குமா? என்பது பற்றி ஆய்வு செய்யப்படும்.

ஒருவேளை அந்த முறை நமது மாநிலத்துக்கு சரியாக இருக்காது என்றால், அதற்கேற்ற வகையில் வேறு முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story