போலீஸ்காரரை அசிங்கமாக திட்டிய பெண் ஐபிஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை....!

போலீஸ்காரரை அசிங்கமாக திட்டிய பெண் ஐபிஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை....!
x

கோமல் மங்கலானி மெயின்புரி சிறை கண்காணிப்பாளராக ஆவதற்கு முன்பு, அவர் ஆக்ரா மத்திய சிறை, கான்பூர் சிறை மற்றும் மொராதாபாத் சிறைகளிலும் பணியமர்த்தப்பட்டு இருந்தார்.

மெயின்புரி

உத்தரபிரதேச மெயின்புரியில் சிறை கண்காணிப்பாளராக உள்ளவர் ஐ.பி.எஸ். அதிகாரி கோமல் மங்கலானி

இவர் சமீபத்தில் அம்பேத்கர் ஜெயந்தி விழா நிகழ்ச்சியில் போலீஸ்காரர்களை அவமானப்படுத்தியதாகவும், போலீஸ்காரர்களைஅவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதாக கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இது குறித்த வீடியோ வைரலாகி உள்ளது.

இது குறித்து விசாரணை நடத்த சிறைத்துறை டிஜி உத்தரவிட்டுள்ளதுடன், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கோமல் மங்கலானி கூறுகையில், வீரர்கள் தன்னையும் பாபா சாஹேப்பையும் பற்றி அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், அதனால்தான் அவர் அவர்களுக்கு பதிலளித்ததாகவும் கூறி உள்ளார்.

கோமல் மங்கலானி மெயின்புரி சிறை கண்காணிப்பாளராக ஆவதற்கு முன்பு, அவர் ஆக்ரா மத்திய சிறை, கான்பூர் சிறை மற்றும் மொராதாபாத் சிறைகளிலும் பணியமர்த்தப்பட்டு இருந்தார்.

1 More update

Next Story