திருப்பதியில் 30 அடி தங்கத் தேரில் உலா வந்து காட்சியளித்த மலையப்பசாமி..!


திருப்பதியில் 30 அடி தங்கத் தேரில் உலா வந்து காட்சியளித்த மலையப்பசாமி..!
x

திருப்பதியில் 30 அடி தங்கத் தேரில் மலையப்பசாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருமலை,

ஒவ்வொரு ஆண்டும் கோடைகால தொடக்கத்தில் திருப்பதி மலையில் வசந்த உற்சவம் என்ற பெயரில் மூன்று நாள் உற்சவம் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் திருப்பதியில் நேற்று துவங்கியது.

வசந்த உற்சவத்தையொட்டி ஏழுமலையான் கோவில் பின்பகுதியில் இருக்கும் வசந்த மண்டபத்தை தேவஸ்தான நிர்வாகம் அடர்ந்த வனப்பகுதி போல் கண்கவர் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வருடாந்திர வசந்த உற்சவத்தை முன்னிட்டு இன்று தங்கத் தேரில் மலையப்ப சாமி பவனி வந்தார். ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி 30 அடி தங்கத் தேரில் உலா வந்து காட்சி அளித்தார். மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் ஆரத்தி எடுத்து மலையப்ப சாமியை தரிசனம் செய்தனர். 30 அடி உயர தங்கத்தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து சென்றனர். திருமலை வசந்த மண்டபத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது.


Next Story