மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருக்கு அவமதிப்பா? - வெங்கையா நாயுடுவிடம் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு


மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருக்கு அவமதிப்பா? - வெங்கையா நாயுடுவிடம் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
x

ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அவமதிக்கப்பட்டதாக வெங்கையா நாயுடுவிடம் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

புதுடெல்லி,

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்ற நிகழ்ச்சி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்தது. இதில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை அரசு அவமதித்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இது தொடர்பாக பல்வேறு எதிர்க்கட்சித்தலைவர்கள் இணைந்து மாநிலங்களவையின் அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.அதில் அவர்கள், 'இன்று (நேற்று) மதிப்புக்குரிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, அவரது பதவிக்கு ஏற்ப இருக்கை ஒதுக்கவில்லை. ஒரு மூத்த தலைவருக்கு வேண்டுமென்றே அவமரியாதை செய்ததற்கு எங்கள் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம்' என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த கடிதத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்து போட்டிருந்தனர். இந்த கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் தாகூர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.


Next Story