மாலூர் கல்குவாரி வெடிவிபத்து வழக்கு விசாரணை சி.ஐ.டி.க்கு மாற்றம்


மாலூர் கல்குவாரி வெடிவிபத்து வழக்கு விசாரணை சி.ஐ.டி.க்கு மாற்றம்
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாலூர் கல்குவாரி வெடி விபத்து வழக்கு விசாரணை சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டிருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் தெரிவித்துள்ளார்.

கோலார் தங்கவயல்:

கோலார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா தேக்கல் அருகே கொம்மனஹள்ளி கிராமம் அருகே உள்ள கல்குவாரியில் கடந்த 13-ந் தேதி வெடிவிபத்து நிகழ்ந்தது. அதில் அங்கு பணியாற்றிய தொழிலாளி ராகேஷ் சாணே படுகாயம் அடைந்து உயிரிழந்தார். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு என்னுடன் மத்திய மண்டல போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்டோர் ஆய்வு செய்தோம். அப்போது பாறையில் இருந்து விழுந்து தொழிலாளி இறந்தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் வெடி விபத்தில் தான் தொழிலாளி இறந்தது கண்டறியப்பட்டது. தவறான தகவலை தெரிவிக்கும் வகையில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கர்நாடக அரசு, கல்குவாரியில் நிகழ்ந்த வெடிவிபத்து தொடர்பாக சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் வெடிவிபத்து வழக்கு விசாரணை தற்போது சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story