மீண்டும் ஆட்சிக்கு வந்து 3-வது ஆண்டு: மக்கள் சக்தியை விட மகத்தான சக்தி இல்லை மம்தா பானர்ஜி பெருமிதம்


மீண்டும் ஆட்சிக்கு வந்து 3-வது ஆண்டு: மக்கள் சக்தியை விட மகத்தான சக்தி இல்லை மம்தா பானர்ஜி பெருமிதம்
x

மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து 3-வது ஆண்டு பிறந்துள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து 3-வது ஆண்டு பிறந்துள்ளது.

இதையொட்டி மம்தா பானர்ஜி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

2021-ம் ஆண்டின் இதே நாளில், ஜனநாயகத்தில் மக்கள் சக்தியை விட மகத்தான சக்தி ஒன்றும் இல்லை என்று உலகத்துக்குக் காட்டிய நமது தாய், தாய்நாடு, மக்கள் ஆகியோருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இன்னும் பல போர்களில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான நமது முயற்சியையும், அர்ப்பணிப்பையும் நாம் தொடர வேண்டும். ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதற்கு தங்கள் இடைவிடாத ஆதரவைத் தொடர்ந்து வழங்கி வருகிற வங்காள மக்களை நான் மனதார வாழ்த்துகிறேன்" என கூறி உள்ளார்.


Next Story