ஐசிசி தலைவர் பதவி; கங்குலி போட்டியிட அனுமதி அளிக்க வேண்டும்: பிரதமருக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை


ஐசிசி தலைவர் பதவி; கங்குலி போட்டியிட அனுமதி அளிக்க வேண்டும்: பிரதமருக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை
x
தினத்தந்தி 17 Oct 2022 9:44 AM GMT (Updated: 17 Oct 2022 9:54 AM GMT)

சவுரவ் கங்குலி நியாயமற்ற முறையில் வெளியேற்றப்பட்டதாகவும் அவரை ஐசிசி தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஐசிசி தேர்தலில் போட்டியிட சவுரவ் கங்குலிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது;- கங்குலி மிக பிரபலமான நபர். இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்து உள்ளார்.

சவுரவ் கங்குலி மேற்கு வங்காளத்தின் பெருமை மட்டும் கிடையாது. அவர் இந்தியாவின் பெருமையும் கூட. அவர் ஏன் இவ்வளவு நியாயமற்ற முறையில் ஒதுக்கப்பட்டார். கங்குலி மீது கவனம் செலுத்தி அவரை ஐசிசி தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்க வேண்டும் என்று நான் பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

ஐசிசி தலைவர் பதவிக்கு வரும் 20 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிட்டால் பிசிசிஐ ஆதரவுடன் கங்குலி எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.


Next Story