மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து 72 வயது முதியவர் தற்கொலை


மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து 72 வயது முதியவர் தற்கொலை
x

மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து 72 வயது முதியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகர்,

அரியானா மாநிலம் குருகிராம் நகரில் குரு திரவுனாச்சாரியா மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு இன்று மாலை வந்த முதியவர் வேகமாக வந்த மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த முதியவரின் சட்டைப்பையில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தனக்கு வாழ விருப்பம் இல்லாததால் தற்கொலை செயவதாக' எழுதப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், தற்கொலை செய்துகொண்ட முதியவர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த ராம் நாராயணன் (வயது 72) என்பதும், குருகிராமில் தனது உறவினர் வீட்டிற்க்கு ராம் நாராயணன் வந்திருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story