15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் - உ.பி.யில் பயங்கரம்


15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் - உ.பி.யில் பயங்கரம்
x

15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை போலீசார் கைது செய்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச பாலியா மாவட்டம் பைரியா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த பெங்கி (வயது 22) என்ற இளைஞன் கடத்தி சென்றார்.

கடந்த 10 நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தில் கடத்திய அந்த 15 வயது சிறுமியை பெங்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் பெங்கியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story